// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தொழில் துறை உரிமை மீட்பு மாநாடு கோவையில் மார்ச் 13 ல் நடைபெறுகிறது

தொழில் துறை உரிமை மீட்பு மாநாடு கோவையில் மார்ச் 13 ல் நடைபெறுகிறது

தொழில் துறை உரிமை மீட்பு மாநாடு கோவையில் மார்ச் 13 ல் நடைபெறுகிறது என தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


 அதனைத் தொடர்ந்து, திருச்சி பிரஸ்கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஜெயபால், ஜே. ஜேம்ஸ், ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி. முத்துரத்தினம். பி. ராஜப்பா உள்ளிட்டோர் கூட்டாக அளித்த பேட்டியில் மேலும் கூறியது:


திருச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, அதில், தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் உரிமைகளை மீட்கும் வகையில், தொழில் துறை உரிமை மீட்பு மாநாடு மார்ச் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், தமிழகத்தில் தொழில் துறையை மீட்டெடுக்கும் வகையில் பல முக்கிய முடிவுகள் தீர்மானமாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளனர்


இந்த நிகழ்வில் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments