BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கத்தின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கத்தின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா

 தமிழகம் முழுவதும் எர்த் மூவர்ஸ் சங்கத்தில் உள்ள நலிவடைந்தவர்களுக்கு ரூ. 25 லட்சத்திற்க்கான  காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அமைத்து தர வேண்டும் - திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கத்தினர் வேண்டுகோள்..

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாபெரும் இயந்திர கண்காட்சி திருச்சி  சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.


 விழாவிற்கு மாவட்டத் தலைவர் S.மஞ்சுநாத், மாவட்டச் செயலாளர் F.டோமினிக் ராஜ், பொருளாளர் P.தர்மர், துணை செயலாளர் கவுதம் கார்த்திக் மற்றும் செய்தி தொடர்பாளர்  M.சரவணன் ஆகியோர்  தலைமை வகித்தனர். செந்தாமரை கண்ணன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட தலைவர் மஞ்சுநாத் சங்கத்தின் கோரிக்கைகளை முன் வைத்தார். விழாவின் முக்கிய நிகழ்சியான பிரமான்ட இயந்திர கண்காட்சியை தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி துவக்கி வைத்தார். மேலும் புதிய வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தாளும், காப்பீடு மற்றும் வாகன வரி விலை உயர்வினாலும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது, எனவே வாகனங்களின் விலை மற்றும் வாகன வரியை குறைக்க கோரியும் வாடகையை உயர்த்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இவ்விழாவில் திருச்சியில் உள்ள வாகன டீலர்கள், நிதி நிறுவனங்கள், உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் மற்றும் கோவை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர்கள் A. மகேஸ்வரன் மற்றும்  V.யுவனராஜ் ஆகியோர்  நன்றியுரை வழங்கினர்.


தொடர்ந்து திருச்சி  மாவட்டத் தலைவர் மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்...எர்த் மூவர்ஸ் புதிய வாகனங்கள் மற்றும்  வாகனத்திற்க்கான டயர், உதிரி பாகங்கள், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காப்பீடு மற்றும் வாகன வரியும் உயர்துள்ளது. இதனால் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  எங்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில்  விரைவில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து, கட்டணத்தை உயர்த்த உள்ளோம். தற்போது 1300 ரூபாயாக உள்ள கட்டணத்தை கூடுதலாக உயர்த்தலாம் என சங்கத்தில் முடிவு செய்துள்ளோம். 


திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கத்தில் 500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதேபோல தமிழகம் முழுவதும் எர்த் மூவர்ஸ் சங்கத்தில் உள்ள நலிவடைந்தவர்களுக்கு ரூ. 25 லட்சத்திற்க்கான  காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அமைத்து தர வேண்டும். வருமான வரி மற்றும் வாகன  காப்பீடு பல வருடங்களாக எர்த் மூவர்ஸ் சங்கத்தினர் அரசுக்கு செலுத்தி வருகிறோம். அதிலிருந்து சிறு தொகையை ஒதுக்கி எங்களுக்கான காப்பீடு திட்டத்தை அமைத்து தர வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்.


திருச்சி மாவட்டத்தில் ஹிட்டாச்சி செயின் வண்டியை உள்ளூர் பணிகளுக்கு குறைந்த பட்சம் 5 கிலோ மீட்டருக்குள் எடுத்து செல்லும் பொழுது சேல் டாக்ஸ் அதிகாரிகள் ஈ வே பில் கேட்டு, பணம் கேட்டு  தொந்தரவு செய்கின்றனர். ஆகையால் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு திருச்சி மாவட்டத்திற்குள் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு "ஈ வே" பில் இல்லாமல் ஹிட்டாச்சி வாகனத்தை எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கிறோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments