மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர், திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments