மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன் தலைமையில் வயலூர் ரோடு பகுதியில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒத்தக்கடை பகுதியில் 44 ஆவது வட்ட செயலாளர் மகேந்திரன் ஏற்பாட்டில் அம்மா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல் 14 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட தாராநல்லூர் பகுதியில் அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் மாநில துணை செயலாளர் அரவிந்தன் ஆகியோர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்.
மேலும் மலைக்கோட்டை முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அவரைத் தொடர்பு ஜெயலலிதாவின் படத்திற்கு அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்..
இந்த நிகழ்வில்
கலீல் ரஹ்மான் MGR மன்ற மாவட்ட செயலாளர் திருச்சி மாநகர மீனவர் அணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ், எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் மகாதேவன், மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் ராஜசேகர், இளைஞரணி இணை செயலாளர் கல்லுக்குழி சுந்தரம், மாவட்ட மாணவரணி பொருளாளர் குமார், 14 வது வட்ட செயலாளர் ராஜ்குமார் ,
திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, இளைஞர் அணி இணை செயலாளர் மகாதேவன், வழக்கறிஞர் அணி தலைவர் சசிகுமார் இளைஞர் அணி துணை செயலாளர் சுந்தர் 14 வது வட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments