// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் சாலை மறியல்

திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் சாலை மறியல்

திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கைது.

விவசாயிகள் விளைவித்த விளைபொருள் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்துகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகள் மீது காவல்துறை வைத்து தண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல்களை நடத்தி விவசாயிகளை நசுக்கி ஒடுக்க நினைக்கும் மத்திய பாஜக மோடி அரசை கண்டித்து




 தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் சிவசாமி லால்குடி ஒன்றிய தலைவர் ராமலிங்கம் செந்துறை ஒன்றிய அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

Post a Comment

0 Comments