BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தேர்தல் பணிக்கு வீடியோ எடுக்கும் பணியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க கூடாது என வீடியோ போட்டா ஒளிப்பதிவாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேர்தல் பணிக்கு வீடியோ எடுக்கும் பணியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க கூடாது என வீடியோ போட்டா ஒளிப்பதிவாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

 தேர்தல் பணிகளுக்கான வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் பணியினை கார்ப்பரேட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்காமல் வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.நாடாளுமன்ற தேர்தல் தேதி  இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்  1800 உறுப்பினர்களுக்கும் மேலாக ஆயுட்கால மற்றும் ஆண்டு சந்தா உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த சங்கம் முறையாக அரசாங்க பதிவு செய்யப்பட்ட சங்கமாக செயல்பட்டு வருகிறது 

வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது ...இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கு முழுமையாக வீடியோ எடுக்கும் மிக முக்கியமான வேலை உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்


அப்படியான மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேலையை மிக நீண்டகாலமாகவும், நிரந்தரமாகவும் இந்த தொழிலை மட்டும் நம்பி இருக்கும் எங்களை போன்ற அரசு பதிவு பெற்ற சங்க உறுப்பினர்களுக்கு வழங்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதை அறிந்தோம். அதனால் மன உளைச்சல் அடைந்திருக்கிறோம் அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தனர் 

எங்கள் உறுப்பினர்கள் நிரூபர்களாகவும் வீடியோ மற்றும் புகைப்படக்கலைஞர்களாவும் நமது அரசு சார்ந்த செய்திகளை பல இன்னல்களுக்கும் இடையே மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகவும் கடுமையான பணியை தினமும் இரவு பகல் பாராமல் செய்துகொண்டுள்ளனர் என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.

இப்படி அரசு நிர்வாகத்தோடு இணைந்து செயல்படும் எங்களைப்போன்ற  புகைப்பட , வீடியோ கலைஞர்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை வழங்கி இருந்தால் எங்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், மேம்படவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும்.

போட்டோ வீடியோகிராபர்களின் இந்த கோரிக்கையை ஏற்று திருச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் பணியை வழங்கிட‌ வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய‌ மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Post a Comment

0 Comments