BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தியாகராஜ பாகவதர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு விஸ்வகர்மா அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

தியாகராஜ பாகவதர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு விஸ்வகர்மா அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

 ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த நாளை முன்னிட்டு  அவரது திருவுருவ சிலைக்கு விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே முத்தரையர் மணிமண்டபம், ரூ.99 லட்சம் செலவில், அவரது முழு உருவச் சிலையுடன், 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌. மேலும், 1,184 சதுர அடி பரப்பளவில் மண்டபத்தின் தரைத் தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 


இதைத்தவிர்த்து,  நீதிக்கட்சியின் வைரத்தூணாக விளங்கிய  சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில், 1,722 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், ரூ.42 லட்சம் செலவில், 1,722 சதுர அடி பரப்பளவிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது


மொத்தம் நான்கு கோடியே மூன்று லட்சம் செலவில் ஒரு நூலகம் உட்பட கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.


அதனைத் தொடர்ந்து ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த நாளை முன்னிட்டு விஷ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை ஏழு இசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் விஷ்வகர்மா தமிழ் கழக மாநிலத் தலைவர் சுடலை மூர்த்தி, தமிழ் மாநில விஸ்வகர்ம ஒர்க்கஸ் யூனியன் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து மாவட்ட செயலாளர் யுவராஜ் கருமண்டபகுதி சிவக்குமார் விஷ்வா அரவிந்தன் ஆடிட்டர் முத்துசாமி சுகுமார் உமாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அதனைத் தொடர்ந்து விஸ்வகர்ம தமிழ் கழகத்தின் மாநில தலைவர் சுடலை மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசுக்கு விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் அதேபோல் இந்த மணிமண்டபத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு மற்றும் படங்கள் அடங்கிய ஆவணங்களை மணிமண்டபத்தில் வைக்கக் கோரியும் அதேபோல் முக்கியமாக மூன்று பேரின் மணிகண்டங்களுக்கு அருகே உள்ள மதுபான கடையை உடனடியாக அகற்றக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

0 Comments