NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் "அமீர் அரேபியன் மந்தி" குடும்ப உணவகம் திறப்பு விழா - அரசு டவுன் ஹாஜி திறந்து வைத்தார்

திருச்சியில் "அமீர் அரேபியன் மந்தி" குடும்ப உணவகம் திறப்பு விழா - அரசு டவுன் ஹாஜி திறந்து வைத்தார்

கீழக்கரை அமீர் அரேபியன் மந்தியின் மற்றொரு மைல் கல்லாக திருச்சி மரக்கடை பகுதியில் "அமீர் அரேபியன் மந்தி ஃபேமிலி ரெஸ்டாரன்ட்" திறப்பு விழா இன்று நடைபெற்றது. 


சன் சைன் ஹஜ் டிராவல்ஸ் உரிமையாளர் பஸல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அரசு டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான் மன்பஈ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார். முன்னதாக திறப்பு விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களை அமீர் அரேபியன் மந்தியின் உரிமையாளர் அமீர் சாதிக் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும் இந்த விழாவில் எஸ்.எஸ்.ஷாஜகான், அற்புதராஜ், கீழக்கரை ஜகுபர் உசேன், கரீம் ரெடிமேட்ஸ் உரிமையாளர் கரீம் உள்பட உறவினர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். 








இந்த அமீர் அரேபியன் மந்தி உணவகத்தில் முழு ஆடு மந்தி, மட்டன் மந்தி, சிக்கன் மந்தி, மீன் மந்தி உள்ளிட்ட மந்தி வகைகளும், கப்ஸா, மஜ்பூஸ், மஃக்ளுபா, பிரியாணி, சைனீஸ் நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ்,  சவர்மா, பரோட்டா, நான், தந்தூரி, டிக்கா, சீக் கபாப் உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ரமலான் நோன்பு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் சஹர் சாப்பாடு குறைந்த விலையில் விதவிதமான வகைகளில் வழங்க உள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் அமீர் சாதிக் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments