ஜனநாயத்திற்கு விடப்பட்டுள்ள சவாலை எதிர்கொள்வோம். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தமிழ்நாட்டில் தோற்கடிப்போம் என் தமிழக மக்களுக்கு த.ம.ஜ.க. தலைவர் கே.எம் சரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்பதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற தமிழக வாக்காளர்கள் வேண்டுகிறோம்.
கடந்த பத்து ஆண்டுகளில் மத துவேசத்தை மட்டுமே முதலீடாக கொண்டு பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று வந்திருக்கிறது. கோவில் கட்டுவதும். ஜனநாயக உரிமைகளுக்கு சமாதி கட்டுவதும், சிறுபான்மை மக்களை நாடற்றவர்களாக அறிவிப்பதும் உலகத்தில் எந்த ஜனநாயக நாட்டிலும், எந்த அரசியல் கட்சியும் தங்களது சாதனைகளாக அறிவித்ததாக வரலாறு இல்லை. ஹிட்லர் தொடங்கி இடிஅமீன் வரை இப்படி வரலாற்று சாதனைகளை யாரும் செய்ததில்லை.
இந்தியாவில் மூன்றாவது முறையும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருமேயானால் குடியாட்சிக்கு முடிவுகட்டி ஒரு முடியாட்சி அரசே அமைக்கப்படும் அபாயம் உள்ளது. தனக்கு ஆகாத முதலமைச்சர்கள் கூட சிறைக்கு அனுப்பப்படுவதும், பணம் தராதவர்கள் ஈடி எனப்படும் ஈட்டி கொண்டு மிரட்டப்படுவதும் உலத்திலேயே வாடிக்கையாக கொண்டு ஒரே அரசாக பாரதிய ஜனதா கட்சி அரசு திகழ்கிறது.
இந்திய வாக்காளர்கள் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட அரசை தூக்கி எறிவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கேட்டுக் கொள்கிறது.
குறிப்பாக தமிழக, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலுல் போட்டியிடும் பாரதிய ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் டெபாஸிட் கூட பெறாத நிலை உருவாக்கப்பட்ட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் சிறுபான்மை மக்கள் இவர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.. அ.இ.அ.தி.மு.க.. இவற்றைப்பற்றி நாம் நன்கு அறிந்திருந்தாலும் இன்றைய தேர்தலில் இவற்றை எல்லாம் மறந்து பாரதிய ஜனதா கூட்டணியை
புறக்கணிப்பதே தனது நோக்கமாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கருகிறது.
எனவே தமிழக வாக்காளர்கள் பாரதிய ஜனதா கூட்டணியை தோற்கடிக்கக் கூடிய வலிமையான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வேண்டுகிறேன்.
பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அவர்களை தோற்கடிக்கும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கே.எம்.சரீப் தெரிவித்துள்ளார்.
0 Comments