// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

 தோல்வி பயம் காரணமாக மோடி சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார் - திருச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி.


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் திருச்சியில் நடைபெற்றது.


இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்றத் தேர்தல் குறித்ததான ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா 




பாஜகவின் மதவாத செயல் திட்டங்களை நிறைவேற்றிட தேர்தலை கருவியாக சூழ்ச்சியோடு செயல்பட்டு வருகிறது. இந்த  அபாயத்திலிருந்து நாட்டை மீட்பதற்காக இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்டு தமிழ்நாடு, புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது, வருகிற 2025‌ ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்படும் மாநிலங்கள் தேர்தலில் ஒரு தொகுதி கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு தொடுப்பது என நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.


மேலும், இன்று நடைபெற்ற செயற்குழுவில் எந்த‌ வித குற்றச்சாட்டும் நிர்வாகிகள் தெரியவில்லை.நாங்கள் எந்த‌வித முடியும் தனிச்சியாக எடுக்கப்படவில்லை.


இந்தியா கூட்டணி தற்போது பலமாக உள்ளது ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் கேட்டிருந்தால் தயக்கமாக இருந்திருக்கும் தற்பொழுது இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. 

தோல்வி பயம் பாஜகவுக்கும்,  மோடிக்கும் வந்துள்ளது. எனவே, அவசர அவசரமாக விதிமுறைகளை வகுத்து சிஐஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments