// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி புதுமை திட்டம் திருச்சியில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தொடங்கி வைத்தார்

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி புதுமை திட்டம் திருச்சியில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தொடங்கி வைத்தார்

சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களின் தேவை என்ன என்பதை கேட்பதற்காக "வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம்" எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை பெட்டி என்ற புதுமையான திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. 




அதன்படி  திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் பாஜக தேர்தல் அறிக்கை பெட்டி வைக்கும் நிகழ்ச்சியை தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று தொடங்கி வைத்தார். 




இதில் வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் லட்சியத்தை அடைவதற்கு உண்டான ஆலோசனைகளை, அப்பகுதி பொது மக்கள் கடிதமாக எழுதி வழங்கினர். இந்நிகழ்வில் பாஜக  திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments