// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏழை, எளிய மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், கொரோனா காலத்திலும் உணவு, கபசுர குடிநீர், முககவசம்  மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் மேற்கொண்டு வருகிறனர்.


மக்களுக்கான அறப்பணிகளில் முத்தாய்ப்பாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.




யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் முன்னிலையில், அமைச்சர் கே.என் நேரு பங்கேற்று ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். 






இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் சேவையில் தொடர்ந்து தங்களை முன்னிலைப்படுத்தி வரும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சேவையை அமைச்சர் கே.என் நேரு வெகுவாக பாராட்டினார்.

Post a Comment

0 Comments