NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** மழை வேண்டி சிறப்பு தொழுகை - பாலக்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை அழைப்பு

மழை வேண்டி சிறப்பு தொழுகை - பாலக்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை அழைப்பு

மழை வேண்டி சிறப்பு தொழுகைக்கு திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கூட்டாக அறிக்கை

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



தமிழகம் முழுவதும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் திருச்சியில் தினம் தோறும் வெயிலின் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறியிருக்கிறது..

மழை வேண்டி இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி ஆங்காங்கே தொழுகைகள் நடத்தி  வருகிறார்கள் அதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை வட்டார உலாமா சபை மிகப்பெரிய அளவில் நாளை 27 ஆம் தேதி சனிக்கிழமை காலை 6.30 மணி அளவில் பிரபாத் ரவுண்டானா அருகில் மழை வேண்டி சிறப்பு தொழுகைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..


இஸ்லாமியர் அனைவரும் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ளுமாறு பாலக்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை அழைப்பு விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments