// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் இரவு நேரத்தில் மின்வெட்டு தமஜக முற்றுகை போராட்டம் அறிவிப்பு

திருச்சியில் இரவு நேரத்தில் மின்வெட்டு தமஜக முற்றுகை போராட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் தற்போது சமீப காலமாக இரவு நேரத்தில் மின் வெட்டு அதிகரித்துள்ளது.


மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமஜக அறிவிப்பு.திருச்சியில் இரவு நேர மின்வெட்டை சரி செய்யாவிட்டால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிவிப்பு..


சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவிக்கும் திருச்சி வாழ் மக்களின் இரவு தூக்கத்தில் மண்ணள்ளி போடும் வேலையை ஒரு மாத காலமாக தொடர்ந்து திருச்சி மின்சார வாரியம் செய்து வருகிறது.இதை திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது...


இரவு நேரங்களில் மின்வெட்டு இனியும் தொடர்ந்தால் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments