// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ தீவிர பிரச்சாரம்

திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ தீவிர பிரச்சாரம்

 வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது..தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் 


திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், வேட்பாளராக களம் காணும் என்னை ஆதரித்து துரை வைகோவை ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை கே.என்.நேரு அவர்கள், திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியில் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு உரையாற்றினார்.


திருச்சி மேயர் மு.அன்பழகன், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் மு.பூமிநாதன்


துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட திமுக, மதிமுக மற்றும் இந்தியா கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகள், தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments