BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா

மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா

திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து மாட்டுவண்டியில் வந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.


திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா போட்டியிடுகிறார்.திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கருப்பையா இன்று இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார்.


 அங்கிருந்து ஆர் எம் எஸ் காலனி விஸ்வாஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து மாட்டு வண்டியில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாட்டு வண்டியினை ஓட்டினார் மாட்டு வண்டியில் நின்றவாறு வேட்பாளர் கருப்பையா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.


இந்த வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்பி ரத்தினவேல் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் அதிமுக மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Post a Comment

0 Comments