// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு

 வரும் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது .இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு கட்டமாக திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து மாவட்ட செயலாளர்கள், அணி செயலாளர்கள் , கழக அமைப்பு செயலாளர்கள், நடிகர் நடிகைகள் என தொடர்ந்து தீவிர வாக்கு சேகரித்து வரும் நிலையில்


நேற்று இரவு 9 மணி அளவில் ஏர்போர்ட் டீக்கடை எதிரில் திருச்சி மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது . 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதை செய்து ஆராத்தி எடுத்து வரவேற்றனர் .


வேட்பாளரிடம் கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் திரண்ட பெண்கள் எங்கள் வார்டு மற்றும் எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் உங்களுக்கே வாக்களிப்போம் என உறுதி அளித்தனர் . இதனால் வேட்பாளர் கருப்பையா பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்

இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன், கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

முன்னதாக வேட்பாளர் கருப்பையா ஏர்போர்ட் டீக்கடையில் அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்து வாக்குகள் சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments