பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை மேற்கு ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
தனது பிரச்சாரத்தை கள்ளை ஊராட்சியில் இருந்து துவங்கினார்...
பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில்...
உங்களுக்கு சேவையாற்ற இளைஞரான என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். இந்த பகுதியினுடைய மக்கள் குறைகள் அனைத்தையும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக இருந்து மண்ணின் மைந்தனான எனக்கு உங்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பை தாருங்கள்.
நான் இந்தப் பகுதி மக்களுடைய குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதோடு, இந்தப் பகுதியில் வேலை இன்றி இருக்கும் இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொழிற்சாலை துவங்க பாடுபடுவேன். விவசாயிகளுக்கு விவசாயம் செழிக்க தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார். எனக்கு வருகிற 19ந் தேதி நாட்டின் தலையெழுத்தை மாற்ற இருக்கிற அன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என கூறினார். இதனை தொடர்ந்து கூடலூர், சின்னையம்பாளையம், கழுகூர், நாகனூர், தோகைமலை, பொருந்தலூர், கல்லடை, பில்லூர், பாதிரிப்பட்டி, சூரியனூர், நெய்தலூர், நங்கவரம் பேரூராட்சி நச்சலூர், முதலைபட்டி, சேப்ளாபட்டி, நெய்தலுர் லுார் காலணி, காலக ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், தளிஞ்சி, புத்தூர், வடசேரி, ஆர்.டி.மலை, புழுதேரி ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார். தோகைமலை பேருந்து நிலையம் அருகே அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் அருண் நேருவிற்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பேசினார். வாக்கு சேகரிப்பின் போது, கரூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா எம்.பி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பரணி கார்த்திகேயன், தோகைமயை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர், கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, முன்னாள் நகர்மன்ற தலைவர் பல்லவிராஜா, குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், தோகைமலை ஒன்றிய பெருந்தலைவர் சுகந்தி சசிகுமார், டாக்டர் கலையரசன் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கரூர் நிருபர் குமரவேல்
0 Comments