BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் சூறாவளி பிரச்சாரம்

பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் சூறாவளி பிரச்சாரம்

பெரம்பலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் N.D. சந்திரமோகன் அவர்கள் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் குளித்தலை மேற்கு மற்றும் மற்றும் தோகைமலை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.


முன்னதாக தனது பிரச்சார பயணத்தை குளித்தலை கிழக்கு ஒன்றியம் சூரியனூர் ஊராட்சி மேலபட்டியில் ஆரம்பித்தார். பின்னர் கவுண்டம்பட்டி, குறிச்சி, கீழ்நங்கவரம், மேல்நங்கவரம், சவாரிமேடு, பொய்யாமணி,


 திருச்சாப்பூர், பங்களாபுதூர், இனுங்கூர், சுக்காம்பட்டி நச்சலூர், ஓந்தாம்பட்டி, குப்புரெட்டியட்டி பணிக்கம்பட்டி, குமாரமங்கலம், மேட்டுமருதூர், மருதூர், ராஜேந்திரம், பரளி, கருங்களாப்பள்ளி, தெற்கு மைலாடி, சத்தியமங்கலம், வை. புதூர் கீழகுட்டப்பட்டி, கோட்டமேடு, குளித்தலை உழவர்சந்தை, பஜனை மடம் பழைய கோர்ட் தெரு, பெரிய பாலம் பஸ்நிலையம், சுங்ககேட், மணத்தட்டை கீழகுறப்பாளையம், திம்மாச்சிபுரம் கடைவீதி, வீரவல்லி, 500 மங்கலம் கண்டியூர், 700 மங்கலம், தாளியாம்படி அய்யர்மலை, திம்மம்பட்டி 4 ரோடு, கணக்குபிள்ளையூர், மேலப்பட்டி வலையப்பட்டி, திருமலைரெட்டிபட்டி, நல்லூர், பேரூர்/கூடலூர், குன்னா கவுண்டம்பட்டி, செம்பாறை, கல்லுபட்டி பொம்மாநாயக்கன்பட்டி, சுக்காம்பட்டி, குழந்தைபட்டி, கள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கரூர் விஜயபாஸ்கர், சிவபதி, கரூர் மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள், டி டி விஜயவினாயகம், கருணாகரன், சந்திரசேகர், இளங்குமரன், ரெங்கசாமி, குளித்தலை நகர செயலாளர் மணிகண்டன், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாசவேல், திருப்பதி, அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் மருதூர் திருநாவுக்கரசு, மாவட்ட மருத்துவர் அணி டாக்டர் தர்மேந்திரன், தேமுதிக மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன், வேங்காம்பட்டி ரெங்கநாதன், SDPI, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments