// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா

ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா

 ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஹஜ்ரத் சாதுஷா தர்வேஷ் ஷாஹின்ஷா காதிரி ஹஜ்ரத் மாதுஷா தர்வேஷ் அவுலியா அவர்களின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. 





முன்னதாக திருச்சி மேல சிந்தாமணியில் இருந்து புறப்பட்டு கடைவீதியை சுற்றி வந்து தர்காவில் நிறைவடைந்தது. மேலும் ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் நிர்வாகிகள் பஷீர் மற்றும் இஸ்மாயில் சந்தன கூடு ஏந்தி தர்காவை மூன்று முறை சுற்றி வந்து   ஹஜ்ரத் சாதுஷா  அவுலியா மற்றும்  ஹஜ்ரத் மாதுஷா அவுலியா அவர்களுக்கு சந்தனம் பூசுதல் வைபவம் நடைபெற்றது.


இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் மற்றும் அதிமுக மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை போற்றி வரவேற்றனர். மேலும் இந்த சந்தனக்கூடு விழாவில் அனைத்து மதத்தை சேர்ந்த பொதுமக்கள் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


 அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு உணவு விருந்து பரிமாறப்பட்டது.

Post a Comment

0 Comments