திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 51 மற்றும் 52 வது வார்டுக்கு உட்பட்ட பீமநகர் கூனி பஜார் பகுதியில் லேசான மழைக்கே வெள்ளம் சூழ்ந்தது. மழை நீரோடு கழிவுநீரும் சேர்ந்து அப்பகுதி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.தொடர்ச்சியாக இப்பகுதியில் நடக்கும் சூழ்நிலை குறித்து மாமன்ற உறுப்பினரிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. SDPI கட்சி நிர்வாகிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இன்று SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி செயலாளர் முஸ்தபா அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் திரு.அன்பழகன் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேயர் அவர்கள் உறுதியளித்தார்.இந்த சந்திப்பின்போது மேற்கு தொகுதி தலைவர் சிராஜ்., மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.பக்ருதீன்., மேற்கு தொகுதி பொருளாளர் பத்ரு ஜமான்., கிளைச் செயலாளர்கள் பஷீர்., ஷாஜகான்., உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 Comments