// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** கள்ளச்சாராயம் விவகாரம் தேமுதிக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராயம் விவகாரம் தேமுதிக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

 கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் என்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி  மாவட்ட தேமுதிக  சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சந்தோஷ் குமார் கண்டன உரையாற்றினார்.



மாணவர் மாவட்ட செயலாளர் கணேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஐயப்பன் , மாநில தொழிற்சங்க பேரவை திருப்பதி, அவைத்தலைவர், ஜெயராமன், அர்ஜுனன்,  முருகேசன், ப்ரீத்தா விஜய் ஆனந்த்,  மில்டன் குமார்,  குமாரவேல் , காளியப்பன், ராஜ்குமார், ஐயப்பன், லோகராஜ்,  வெங்கடேசன், மணிகண்டன், பிரியா சாந்தி மற்றும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments