BREAKING NEWS *** சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் *** பழமை வாய்ந்த காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது எஸ்டிபிஐ கட்சி வர்த்தக அணி சார்பில் மனு

பழமை வாய்ந்த காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது எஸ்டிபிஐ கட்சி வர்த்தக அணி சார்பில் மனு

 நூற்றாண்டு பழமையான காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என ஆட்சியரிடம் எஸ்டிபிஐ கட்சி வர்த்தக அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.திருச்சி என்றாலே பல அடையாளங்கள் உள்ளது அதில் மிக முக்கியமான அடையாளமாக இருப்பது காந்தி சந்தை  ஆகும்


காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867‌ஆம் ஆண்டு துவங்கி 1868 ஆம் ஆண்டு முடிந்தது.

அதன்பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927 ஆம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டு 1934 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அதே ஆண்டு காந்தியடிகள் திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார்




திருச்சி மாநகரில் நூற்றாண்டுகளாக செயல்பட்டு வரும் காந்தி சந்தையை இடமாற்றம் செய்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காந்தி மார்க்கெட் வளாகம் கட்டி அங்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தீர்மானித்துள்ளது.

.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் திட்ட பணிகள் தொடர்பாக வியாபாரிகள் சங்கம் மற்றும் பிரதிநிதிகள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என மனு அளித்தனர்.


காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்துவரும் கமிஷன் வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகள் பாதிக்காத வகையில் அனைவருக்கும் புதிதாக தொடங்க உள்ள பஞ்சப்பூர் வணிக வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், இல்லாவிட்டால் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையிலேயே காந்தி மார்க்கெட் தொடர்ந்து செயல்பட வேண்டும் மேலும் திருச்சி மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்வதை ஆட்சியர் தவிர்க்கவேண்டும் என்றும் ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Post a Comment

0 Comments