தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இதுவரை இல்லாத வித்தியாசமான ஒரு விளம்பரத்தை வெளியிட்ட திருச்சியை சேர்ந்த திமுக வழக்கறிஞர் மணிவண்ண பாரதி...நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திரைப்படத்தின் இடைவேளையின் போது பொது விளம்பரங்கள் வெளியிடப்படும்.
அந்த வகையில் திமுக வழக்கறிஞர் மணிவண்ண பாரதி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதியில் அடங்கிய தொகுதிகளில்
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திரு. K.N.அருண்நேரு, M.S, M.P., அவர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் திமுக கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி நன்றி எனக்கூறி ஆடியோ, வீடியோ பதிவுடன் கூடிய ஒரு விளம்பரத்தை திருச்சியின் முக்கியமான திரையரங்குகளான சோனா-மீனா தியேட்டர் மற்றும் திருச்சியில் ஒரு காலத்தில் மாரிஸ் தியேட்டர் என்று அழைக்கப்பட்டு தற்போது LA சினிமாஸ் என்று பெயர் மாற்றப்பட்ட இரண்டு திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தார்.
இந்த மாதிரியான அரசியல் விளம்பரங்கள் இதுவரை நாட்டிலுள்ள எந்த ஒரு திரையரங்குகளிலும் வெளியிட்டது கிடையாது.
இந்த விளம்பரத்தினை பார்த்த சினிமா ரசிகர்கள், இப்படியும் விளம்பரம் கொடுக்கலாமா, எவரும் சிந்திக்காத முயற்சி என்றும் பல பல காரணங்களை அந்த வழக்கறிஞருக்கு திரையரங்குகளின் உள்ளேயே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனைப் பற்றி நாமும் விசாரித்த போது இதுபோன்ற அரசியல் விளம்பரம் இதுவரை யாரும் கொடுத்ததில்லை என்றும் இது தான் தமிழகத்திலேயே திரையரங்குகளில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரம் என்றும் கள ஆய்வில் தெரிந்து கொண்டோம்.
உண்மைதான் உண்மையிலேயே இது போன்ற விளம்பரம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது கிடையாது. வித்தியாசமான விளம்பரம் என்றாலும் கூட அந்த மாதிரியான ஒரு விளம்பரத்தை வெளியிட காரணமாக இருந்த உயர்திரு.K.N.அருண்நேரு, MS.,M.P.,க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்..
உயர்திரு.K.N.அருண்நேரு, MS.,M.P., அவர்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும். பாராளுமன்றத்தில் அவரின் குரல் ஒலிக்கட்டும் என திமுக வழக்கறிஞர் மணிவண்ண பாரதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்
0 Comments