NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** தமஜக போராட்ட அறிவிப்பு எதிரொலி மேயர் ஆய்வு

தமஜக போராட்ட அறிவிப்பு எதிரொலி மேயர் ஆய்வு

 தமஜக போராட்ட அறிவிப்பு காரணமாக திருச்சி மாநகரில் குடிநீர் ஆய்வு பணிகளை மேயர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தெரிவித்துள்ளார்.தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


திருச்சி மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி கோரி மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.


தமஜக மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்ட அறிவிப்பின் எதிரொலி நேற்று காலை முதல் திருச்சி கலங்கலான குடிநீர் உள்ள பகுதிகளில் மாநகராட்சி மேயர் மற்றும் ஊழியர்கள் சுட்றி சுட்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இது போன்ற மக்கள் நல பணிகள் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஆவல்.மக்களுக்கான அடிப்படைத் தேவை அனைத்தும் பூர்த்தி ஆகும் வரை ஒருபோதும் ஓயாது எங்களது குரல்.இவ்வாறு அந்த அறிக்கையில் ராயல் சித்திக் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments