திருச்சி மாநகர் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுகாதாரமற்ற குடிநீர், மஞ்சள் காமாலை நோய் பரவியதை கண்டித்து வருகிற 22 ஆம் தேதி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிவித்தார்..
இந்த முற்றுகை போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக மூன்று மணி நேரம் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் தமஜக வின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தருவதாக அரசு தரப்பில் உறுதி அளித்தனர்..
இன்றைய தினம் 20/7/2024 மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது..
இந்த அமைதி பேச்சுவார்த்தையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மாவட்ட பொருளாளர் A.தென்னூர் கலீல் ரகுமான். மாவட்ட துணை செயலாளர்கள் A.முஹம்மது தாஹா k.m.அபூபக்கர் சித்தீக் ஹஜ்ரத்) கம்பரசம்பேட்டை காஜாமைதீன் பழனி பாபா பேரவை மாவட்ட செயலாளர் கே.டி.எஸ்.பீர்முகமது இளைஞரணி மாவட்ட செயலாளர் ஐ.சேக் கான் ஜங்ஷன் பகுதி செயலாளர் பீமநகர் சித்திக் உறையூர் பகுதி செயலாளர் ஷேக் அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த அமைதி பேச்சு வார்த்தையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள்...
திருச்சி மாவட்டத்தில் கூனி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 7 மாதமாக பரவும் மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தெருக்களில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடு இன்றியும் சுத்தமான நிலையம் கிடைக்க ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும்.உய்யகொண்டான் வாய்க்கால் கழிவுகள் செல்ல தடையாக உள்ள வரகனேரி பகுதியில் உள்ள இரும்பு பாலத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை நீர் சேமிப்பு திட்டத்தினை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.
உய்ய கொண்டான் ஆற்றில் கலக்கும் சாக்கடை நீரை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
மாநகராட்சி மற்றும் சுகாதார துறையின் சார்பாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்....
அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றியும் சுத்தமாகவும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
தீவிர கொசு ஒழிப்பு பணி மூலம் கொசுவினை கட்டுப்படுத்த பத்து நாட்களுக்கு தொடர்ந்து கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொசு ஒழிக்கும் பணிகள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியின் உட்புறத்தில் இருந்து பணி தொடங்கப்படும்.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை மீண்டும் செயல்படுத்தும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் பொதுப் பாலங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் இரண்டு மாதத்திற்குள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை இரவு நேரங்களில் பிடிக்க நிர்வாக ரீதியாக கலந்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உள்ளிட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மக்கள் நல கோரிக்கைகள் அனைத்தும் அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனடியாக செயல்படுத்துவதாக வாக்குறுதி அளிக்க பட்டதை தொடர்ந்து நாளைய மறுநாள் நடைபெற இருந்த மாநகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மக்கள் நலக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக வெற்றி பெறும் இந்த நிகழ்வில் ஒத்துழைப்பு வழங்கிய அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்கள் அத்தனை நபர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தெரிவித்து கொண்டார்.
0 Comments