திருச்சி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ரிஹாப் இந்தியா டிரஸ்ட் இணைந்து பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
5 கிலோமீட்டர் வரையிலான இந்த மாரத்தான் ஓட்டம் 15 வயதிற்குட்பட்டோர், 15 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளில் நடத்தப்பட்டது, இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் நீதிமன்ற சாலை, பாரதிதாசன் சாலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
மாரத்தான் ஓட்டத்தினை வருவாய் கோட்டாட்சியர் அருள், மாசுக்கட்டுப்பாட்டுவாரிய துணை பொறியாளர் சிவரஞ்சனி, என்ஜிஓ நிர்வாகி சக்திவேல் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்..
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 25 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
0 Comments