நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும் தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சங்கமம் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி சங்கமம் நம்ம ஊர் திருவிழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் 26, 27 வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு நிக்கசியை தொடங்கி வைத்து, பார்வையிட்டு மாவட்ட கலைமன்ற விருதுகளை வழங்கினார்.
மேலும் இந்த திருச்சி சங்கமம் நம்ம ஊர் திருவிழாவில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 375 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் கிராமிய பாடல்கள், பரதநாட்டியம், மயிலாட்டம், காவடியாட்டம், சக்கைக் குச்சியாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், நையாண்டிமேளம், புலியாட்டம், இறைநடனம், தப்பாட்டம். கரகாட்டம், காளியாட்டம், பல்சுவை நாட்டிய நிகழ்ச்சி, வள்ளித்திருமணம் நாடகம், கிராமியப் பாடல், பறையாட்டம், சாமியாட்டம், பரதநாட்டியம், கரகாட்டம், தெம்மாங்குப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை பொது மக்கள் கண்டுகளிக்க கலை பண்பாட்டுத் துறையினர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்வில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருச்சி மண்டல கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் ஹேமநாதன்,
மைய உதவி இயக்குநர் (கூ.பொ) செந்தில்குமார், திருச்சி மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ், கலை பண்பாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் கலைஞர்கள், அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments