BREAKING NEWS *** "அளவற்ற வறுமையைத் தாண்டினார் எம்.ஜி.ஆர்" "கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்" "தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்.ஜி.ஆர்" "இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" -த.வெ.க தலைவர் விஜய் *** திருச்சி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிவிப்பு

 திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலங்களாக தரமற்ற  சுகாதாரமற்ற குடிநீரால் திருச்சி மாவட்டத்தில்  ஆயிரக்கணக்கான மக்களுக்கு மஞ்சள் காமாலை நோய் மற்றும் உயிர் கொல்லி கொசுக்களால் டெங்கு காய்ச்சலும் பரவ ஆரம்பித்துள்ளது.


பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்ட போதிலும் அதை தடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடாமல் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடி ஆராய்ந்து அவர்களுக்கான நிவாரணமோ சரியான மருத்துவமும் இதுனால் வரை வழங்கப்படவில்லை. 

கொசு ஒழிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெறவில்லை.

மேலும் வெறி நாய்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. நாய் கடிகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது.இதனால் இரவு நேரங்களில் பயணிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்..


இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளும் உயிரை கையில் பிடித்து தினமும் அரண்டு போய் வீடு திரும்புகின்றளர் இந்த பேராபத்தை உணர்ந்து நாய்களின்  பிடியில் சிக்கி உள்ள மக்களை காக்க உரிய நடவடிக்கையும் உயரிய நடவடிக்கைகளையும் மாநகராட்சி எடுக்க தவறுகிறது. மாறாக அதிக அளவில் புகார் எழும் பகுதிகளில் நாய் வண்டிகளை வைத்து ஒன்று இரண்டு நாய்களை பிடித்து கண்துடைப்பு வேலைகளை மட்டுமே தொடர்ச்சியாக செய்து வருகிறது. 


மேலும் திருச்சி மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்ள எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து நமது மாவட்ட ‌மக்களை காக்க சாலைகளிலும் பாலங்களிலும் வீணாகும் மழை நீரை சேமிக்க மழை நீர் சேமிப்பு திட்டத்தை மாநகராட்சியும். அதேபோல் மழை நீரை சேமிக்க ஒவ்வொரு வீடுகளிலும் போதிய விழிப்புணர்வையும் மழை நீர் சேமிப்பு தொட்டியினை ஏற்படுத்தும் முயற்சியையும் மாநகராட்சி நிர்வாகம் இதுனால் வரை எடுக்கவில்லை. வர இருக்கும் மழை காலங்களில்  மழை நீரை முறையாக சேமிக்க தக்க நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க கோரியும்.


 நமது மாவட்டத்தின் பெருமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உய்ய கொண்டான் ஆறு  சாக்கடை குளமாக மாறியதை கண்டித்தும். வரலாற்றுச் சிறப்புமிக்க நீர் பாசனத்தின் தாயாக விளங்கிய உய்யகொண்டான் ஆற்றை உடனடியாக பெயர் அளவில் இல்லாமல் முழுவதுமாக தூர்வாரி சுத்தப்படுத்தி செம்மைப்படுத்த வலியுறுத்தியும்.மக்கள் நலன் சார்ந்த இந்த கோரிக்கைகள் அனைத்தையும் விரைவாகவும் உடனடியாகவும் செய்து தர வலியுறுத்தியும். திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல்ரஹ்மான் மாவட்ட துணை செயலாளர்கள் முகமது தாஹா கே.எம்.அபூபக்கர் சித்திக் (அஜரத்) கம்பரசம்பேட்டை காஜாமைதீன் ஆகியோர் முன்னிலையிலும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வெறிநாய்க்கடிகளில் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து. சாக்கடை நீர் கலந்த புழு பூச்சிகள் நிறைந்த குடிநீருடனும். கொசு  ஒழிப்பு மற்றும் நாய் பிடிப்பு சாதனங்களுடனும் வருகின்ற 22.7.2024 திங்கள் கிழமை காலை 10:30 மணிக்கு மாபெரும் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாகவும் மக்கள் நலன் சார்ந்தும் மாவட்டத்தின் நலன் சார்ந்தும் நடைபெறும் இப் போராட்டத்தில் நமது பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் ஜமாத்தார்கள் என அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு நமது மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் படி அனைவரும் போராட்ட களத்திற்கு வர வேண்டும் என்றும். அக்கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments