// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** அறம் சிங்கப்பெண்ணே திட்டம் மூலம் 39 பெண்களுக்கு இலவச இ ஆட்டோ" வழங்கிய ரோட்டரி கிளப்!

அறம் சிங்கப்பெண்ணே திட்டம் மூலம் 39 பெண்களுக்கு இலவச இ ஆட்டோ" வழங்கிய ரோட்டரி கிளப்!

 சர்வதேச ரோட்டரி சங்கம் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான, மாவட்ட ஆளுநர் ஆனந்தஜோதி ராஜ்குமாரின் கனவு திட்டமான "அறம் - சிங்கப் பெண்ணே" என்ற திட்டத்தின் மூலம், அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பாக, 39 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இ - ஆட்டோ இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தேசிய கல்லூரியில் இன்று நடைபெற்றது. 


இதில்  சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் எம்.முருகானந்தம் கலந்து கொண்டு பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு  இ - ஆட்டோக்களை வழங்கினார். 


மேலும் இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார்,  மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மாவட்ட ஆளுநர் தேர்வு கார்த்திக், மாவட்ட ஆளுநர் நியமனம் சுப்பிரமணி மற்றும் காவேரி மெடிக்கல் சென்டரின் இயக்குனர் அன்புச்செழியன், ரோட்டரி பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு, தேசிய கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் இந்த திட்டத்திற்கு சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் எம்.முருகானந்தம் மற்றும் அவரது நிறுவனம் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments