தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சார்பில் திருமா மற்றும் காட்டூர் பகுதி நிர்வாகிகளின் ஏற்பாட்டில், நாட்டின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காட்டூர் அருகே உள்ள புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞா் வி.எல். சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
பின்னர் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பரிசுகளும், நோட், புத்தகம்,பென்சில், பேனா போன்ற உபகரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செந்தண்ணீர்புரம் ஜான் , அரியமங்கலம் மூர்த்தி, அரியமங்கலம் நாகேந்திரன், கில்லி பிரபு, பொன்மலை கேசவன், சுந்தர் திருச்சி, உ.கொ.குணா, மலைக்கோவில் ஜோசப், எழில்நகர் சரண், திருவெறும்பூர் ஆரிப்,
பாலக்கரை ரா.சி.சூர்யா, காட்டூர் கேசவன், முத்துவேல், ஜெய்குமார், டிராவிட், உப்புபாறை ஜீசஸ், டர்கீஷ், கார்த்திகா, சுபாபிரபு, அகிலா, நந்தினி, சுரேந்திரன், காயத்திரி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட நிர்வாகிகளும் கழக தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments