NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் (MTS) திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய கொடி ஏற்றம்

மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் (MTS) திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய கொடி ஏற்றம்

 மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் (MTS) திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய கொடி ஏற்றும் விழா நடைபெற்றது 


78 ஆவது சுதந்திர தினத்தை தொடர்ந்து மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் (MTS) சார்பாக ஏர்போர்ட், கேகே நகர், காமராஜ் நகர்,இப்ராஹிம் பார்க், நத்தர்ஷா பள்ளிவாசல் ஆகிய ஆட்டோ ஸ்டாண்டுகளில் MTS மாவட்ட செயலாளர் ஜாவித் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. 


மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, தலைமை பிரதிநிதி வழக்கறிஞர் நூருதீன், மாவட்ட செயலாளர் அசரஃப் அலி, மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்தனர். 









மேலும் இந்நிகழ்வில் மனிதநேய தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments