NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

 இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


இதன்பின் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் நந்தகுமார் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் கணேசன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள்   மற்றும்  பலர்   கலந்துகொண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பித்தனர்.


கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments