திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்றது
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகராட்சி 17,19,20 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்து அதனை பொதுமக்கள் குடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மஞ்சள்காமாலை, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பலர் இறந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்குக் காரணமான அரசையும், திருச்சி மாநகராட்சியையும் கண்டித்து, இன்று திருச்சி, மரக்கடை, எம்ஜிஆர் திடலில், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் அதிமுக அமைப்பு செயலாளர்கள், ரத்தினவேல், மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, மகளிரணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக் , MGR மன்ற செயலாளர் கலீல் ரஹ்மான்
பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், வழக்கறிஞர் முல்லை சுரேஷ், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
0 Comments