NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** எலும்பு மற்றும் மூட்டுநாள் தினத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

எலும்பு மற்றும் மூட்டுநாள் தினத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

இந்திய எலும்பு மருந்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ரோட்டரி கிளப் மற்றும் அட்லஸ் தனியார் மருத்துவமனை இணைந்து இன்றையதினம் எலும்பு மற்றும் மூட்டு நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணியை நடத்தினர்.


சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணியானது கரூர் பைபாஸ் சாலை, சாஸ்திரி ரோடு, தலைமை தபால்நிலையம், டிவிஎஸ்டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு மைதானம்வரை சென்று நிறைவடைந்தது.


இந்த இருசக்கர வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் காமினி, ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி, ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகி அதிகாரி சுபா பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



இதில், ஹெல்மெட் அணிந்து பயணிக்கவும், சாலைபாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்கவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது.




 மேலும் விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு தங்களது எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்குவதை தடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் குதிரை முன்னே செல்ல இருசக்கர வாகனத்தில்   நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று பேரணியாகச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Post a Comment

0 Comments