கேரளா மாநிலம் வயநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடு, முண்டக்கை மற்றும் சூரல்மலை போன்ற பகுதிகளில் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் 1208 வீடுகள் முற்றிலும் அழிந்தது.
தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. தமிழர்களும் மாயமாகி உள்ளனர். இந்த பயங்கர நிலச்சரிவினால் அப்பகுதியில் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் எனப் பல பேர் மாட்டிக்கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்புப்பணி வீரர்கள் பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு வருகின்றனர்.
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் மனித விடியல் மோகன், ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்க தலைவர் மோகன்ராம்,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், கன்மலை அறக்கட்டளை வில்பர்ட் எடிசன், புது சுவாசம் அறக்கட்டளை பாலசுப்ரமணியன், சுசிலா ராஜசேகரன் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் ராஜசேகரன், புதிய பாதை அறக்கட்டளை தீபா, அருணாச்சலம், நாட்டுக்கு நல்லது செய்வோம் அறக்கட்டளை கணேஷ், டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் தலைவர் பக்கிரி சாமி, சபீர் அகமது, ஷெரிப், ஜின்னா, ஹரிஹரன், ஆசிரியர் ஜூலி உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
0 Comments