NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மேற்கு வங்கத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட பெண்ணிற்கு நீதி வேண்டி பாஜக மகளிர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம்

மேற்கு வங்கத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட பெண்ணிற்கு நீதி வேண்டி பாஜக மகளிர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம்

மேற்கு வங்கத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட பெண்ணிற்கு நீதி வேண்டி பாஜக மகளிர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது 


மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.9ம் தேதி இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.. இந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது.


இந்நிலையில் திருச்சி பாஜக மகளிர் அணி சார்பாக மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் கவிதா ஶ்ரீதர் தலைமையில்   இறந்த பெண்ணிற்கு நீதி வேண்டி மெழுகு வர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது




இதில் 50 க்கு மேற்பட்ட பெண்கள் கொண்டார்.தொடர்ந்து  மகளிர் அணி பொதுச் செயலாளர் கவிதா ஶ்ரீதர் செய்தியாளர்களிடம்  கூறும்போது: 

பெண் முதல்வராக இருக்க கூடிய மாநிலத்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொலை நடந்து உள்ளது இதற்கு மேற்கு வங்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனை கண்டித்து இந்த அமைதி பேரணி நடைபெற்றது என தெரிவித்தார் 



மேலும் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்த  தமிழ்நாட்டை சேர்ந்த பெண் எம்.பி க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் எதும் கூறவில்லை அதே போன்று இந்தியா கூட்டணியில் உள்ள  திமுக சார்பில் யாரும் இந்த நிகழ்வை  கண்டிக்க வில்லை என தெரிவித்தார்


மேலும் மேற்கு வங்க அரசு குற்றவாளிக்கு மிகப்பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும்,

 இதுபோன்ற நிகழ்வு எந்த மாநிலத்திலும் நடைபெற கூடாது என கூறினார்

Post a Comment

0 Comments