NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு நாளை திருச்சியில் நடைபெறுகிறது. மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLA பங்கேற்பு

மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில செயற்குழு நாளை திருச்சியில் நடைபெறுகிறது. மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLA பங்கேற்பு

மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பீமநகரில் நாளை 18.08.2024 காலை நடைபெறுகிறது.



இளைஞர் அணியின் மாநில செயலாளர் தாம்பரம் அன்சாரி தலைமை தாங்குகிறார். இளைஞர் அணியின் மாநில பொருளாளர் நெல்லை ரியாஸ் வரவேற்பு உரையாற்றுகிறார்.


இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர்கள் சிவகங்கை இம்ரான், ஈரோடு மீரான், ஆம்பூர் இர்பான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.


பொது செயலாளர் அப்துல் சமது MLA, தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், துணை பொது செயலாளர்கள் தாம்பரம் யாக்கூப், தஞ்சை பாதுஷா, சலிமுல்லாஹ் கான், இளைஞர் அணியின் தலைமை பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான புழல் ஷேக் முகமது ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர் அணியின் மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், இப்ராஹிம் ஷா, ஹுமாயூன் கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments