NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரைக்குறைவாக விமர்சித்ததாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களை அதிமுகவினர் நடத்தி வரும் நிலையில்,  





திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 




இதில் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன் அண்ணாமலைக்கு அரசியல் தெளிவு இல்லை  அரசியல்  கற்றுக்கொள்வதற்காக பாஜக  அண்ணாமலையை லண்டன் அனுப்புகிறது 



இதனை கண்டித்து திருச்சி  பாஜக இளைஞர் அணி மகளிர் அணி சார்பாக திருச்சி வழிவிடு வேல் முருகன் கோவில் அருகே கண்டன  ஆரப்பாட்டம் நடைபெற்று




இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதற்கும், அண்ணாமலை உருவ படத்தை எரித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே எடப்பாடி உருவப்படத்தை எரித்தும்  துடப்பத்தால் அடித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது




உருவப்படத்தை படத்தை எரித்ததால்  பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு  ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.இதில் 50க்கு மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர் 

இந்த போராட்டம் காரணமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே பரபரப்பாக காணப்பட்டது

Post a Comment

0 Comments