SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், மேற்கு சட்டமன்றத் தொகுதி 29 வது வார்டு அண்டகொண்டான் கிளையின் 2024-2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேற்கு தொகுதி தலைவர் ந.சிராஜ் , மற்றும் துணை தலைவர் KSA.ரியாஸ் தேர்தல் பார்வையாளர்களாக கலந்துக் கொண்டார்கள்.முன்னாள் கிளைத் தலைவர் அப்பாஸ் அவர்கள் கடந்த மூன்று ஆண்டில் நடைபெற்ற கட்சியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்கள்.சனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகளை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் K.தமீம் அன்சாரி அவர்கள் அறிவித்தார்கள்.
2024-2027 ஆம் ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
தலைவராக கலீல் ,அப்பாஸ் அலி துணை தலைவராகவும்,அலாவுதீன் செயலாளராகவும்,ஷாஜஹான் இணை செயலாளராகவும் இப்ராம் ஷா பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை கூறி சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் வழங்கினார்கள்.
இறுதியாக புதிய அண்டகொண்டான் கிளை தலைவர் கலீல் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
0 Comments