சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் அநாகரிகமாக பேசி உள்ளார். இந்த சம்பவம் குறித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கண்டன அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில் கூறுகையில்..
தமிழகத்தில் சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெறுப்பு பேச்சுகளையும் முன்னாள் முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சுகளையும் பேசி வரும் சூழ்நிலையில் அதனுடைய தொடர்ச்சியாக இன்று (04/08/2024) சென்னையில்
நடந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சட்டம் ஒழுங்கை பேணிகாக்கும் தமிழக காவல்துறை அதிகாரிகளை இழிவாகவும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் வருண்குமார் IPS அவர்களை ஒருமையில் தகாத வார்த்தையில் பொது மேடையில் ஒரு கட்சியின் தலைவராக இருந்துக்கொண்டு பேசியது கடும் கண்டத்திற்குரியது..
எனவே தமிழக அரசு உடனடியாக தொடர்ந்து இப்படிப்பட்ட செயலில் ஈடுப்பட்டு வரும் சீமான் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்
0 Comments