BREAKING NEWS *** திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணையை தற்காலிகமாக நிறுத்திய ஆந்திர சிறப்பு விசாரணைக் குழு *** மது போதை,ஆபாசம், ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம் என்ற தலைப்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு

மது போதை,ஆபாசம், ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம் என்ற தலைப்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு

ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது.


மாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் எனும் மையக்கருத்தில்செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒழுக்கமே சுதந்திரம் என்னும் தலைப்பில் மது,சூதாட்டம் உள்ளிட்டவைகளால் சீரழிந்து வரும் சமூகத்தை சீர்திருத்திட மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆடை அலங்காரத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் இவைகளின் பாதிப்புகள் என்னென்ன என்பதையும் புரிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.




அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை ஆய்வாளர் அஜீம், என். ஆர்.ஐ ஏ எஸ்.அகாடமியின் இயக்குனர் விஜயா லயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் தலைமை தபால் நிலையம் முதல் மேலப்புதூர் வரை மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள்உள்ளிட்டவர்கள் ஏராளமான பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் முடிவில் மக்கள் தொடர்புச் செயலாளர் நவாஸ்கான் நன்றி கூறினார்

Post a Comment

0 Comments