திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் தேசிய மற்றும் மாவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ள தடகள விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வருகின்ற செப்டம்பர் 22 முதல் 26/09/2024 வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே நடைபெறவுள்ள தடகள விளையாட்டு போட்டிகளில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
17 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் பிரியதர்ஷனி 400 மீட்டர் 800 மீட்டர் 1500 மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும் 14 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் 200 மீட்டர் 400 மீட்டர் 600 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கிர்த்திகாவும் கலந்து கொள்ள உள்ளனர்.
அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார் மண்ணுக்கும் மக்களுக்கும் அமைப்பின் திருச்சி கிளை ஒருங்கிணைப்பாளர் கேசவன் தொழில் அதிபர் சிவகுமார் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்ச்சியாளருமான சுரேஷ் பாபு மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம் டாக்டர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி ரத்தினகுமார் மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவரும் தேசிய மாநில அளவில் விருதுகள் பெற்ற குறும்படத்தின் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
0 Comments