NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி BESTOW இரத்த வங்கி திறப்பு விழா - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி BESTOW இரத்த வங்கி திறப்பு விழா - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் BESTOW இரத்த வங்கி திறப்பு விழா இன்று நடைபெற்றது.  


செயலாளர் தமீம் அராஃபத் மற்றும் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்த வங்கியை திறந்து வைத்தார்.


மேலும் இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த புதிய ரத்த வங்கி அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் துவக்கப்பட்டுள்ளது. 



இந்த ரத்த வங்கி, ரத்த தானம் கொடுப்பவர்களுக்கும், தானம் பெறுபவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதமாக, 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. மேலும்  மருத்துவமனைகள் மற்றும் தனி நபர்களுக்கு சேவையை வழங்கும் வகையில் செயல்பட உள்ளதாக இறத்தவங்கியின்  நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments