திருச்சி தில்லை நகரில் இயங்கி வந்த "திருச்சி ஃபெடல் மெடிசன் & ஃபெர்ட்டிலிட்டி சென்டர்", புதிய அதிநவீன வசதிகளோடு திருச்சி அண்ணாமலை நகரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக டாக்டர் ராமேஸ்வரி நல்லுசாமி, டாக்டர் தமிழ்செல்வி, டாக்டர் ஸ்ரீப்ரியா ஆகியோர் சிறப்பு விருந்தினரை கௌரவித்தனர். மேலும் இந்நிகழ்வில் டாக்டர் சார்மிளா, டாக்டர் சுசீலா தேவி உள்பட மருத்துவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருச்சி கரு மருத்துவ மையம் 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது திருச்சியில் முதல் மையமாகவும், தென் தமிழகத்தில் இரண்டாவது மையமாகவும் உள்ளது.
கர்ப்பகால முதல் மூன்று மாத ஸ்கேன், கருகுறைபாடு ஸ்கேன் மற்றும் கர்ப்பகால மூன்றாவது 3 மாத ஸ்கேன் பரிசோதனை செய்வதில் இந்த மையம் முன்னோடியாக திகழ்கிறது. ஊடுருவும் சிகிச்சைகள் ஆம்னியோ, சிவிஎஸ் மற்றும் கரு குறைப்பு ஆகியவற்றிலும் இந்த மையம் மேலோங்கி உள்ளது. மேலும் இரட்டை கரு லேசர்,
கரு இரத்த சோகைக்கான கருப்பைக்குள் ரத்தம் ஏற்றுதல் ஆகிய சிகிச்சை செய்த முதல் மையம் இந்த திருச்சி கரு மருத்துவ மையம் ஆகும்.
0 Comments