திருச்சி மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்குவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், பகுதியில் ஆற்ற வேண்டிய மக்கள் பணிகள் குறித்தும் ஜங்ஷன் பகுதி கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் நாகநாதர் பாண்டி ஏற்பாட்டில் இன்று நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடாவும் கழக அமைப்புச் செயலாளருமான மனோகரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் ஆவின் சேர்மனும் மாவட்ட பேரவை செயலாளருமான கார்த்திகேயன், மாநில பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக்,
மகளிர் அணி வக்கீல் புவனேஸ்வரி, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி நிர்வாகிகள் சபீனா பேகம் மீரான், ஆரோக்கியமேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
0 Comments