NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கதிரேசன் செட்டியார் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம்!

கதிரேசன் செட்டியார் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம்!

 திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பேஷலிட்டி கிளினிக்கில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 


A.கதிரேசன் செட்டியாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் எலும்பு அடர்த்தி பரிசோதனை, சர்க்கரை நோய் இரத்த பரிசோதனை, இரத்தத்தின் கொழுப்பு அளவு கண்டறிதல், இரத்த அழுத்த  பரிசோதனை மற்றும் இரத்தத்தின் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு சோதனை, நீரிழிவு நரம்பியல் சோதனை, இரத்தத்தின் யூரிக் அமிலம் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. 


இந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 


மேலும் எலும்பு முறிவு, மூட்டு வலி, பொது மருத்துவம், சர்க்கரை நோய், நுரையீரல் நோய், தோல் நோய், பிசியோதெரபி மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


 முகாமில் டாக்டர் ரோஷன் ராஜ், தில்லை மெடிக்கல்ஸ் மனோகரன், டாக்டர் ஞானசேகரன், டாக்டர் ராமநாதன், டாக்டர் விக்னேஷ் குமார், டாக்டர் அனுசுயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments