NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச அறிவியல் தினம்

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச அறிவியல் தினம்

 திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னாட்சி அமைதியும் வளர்ச்சியும் என்ற கருத்தில் உலக அறிவியல் தினத்தை பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்கள் நடைபெற்று வருகிறது.


இந்த நிகழ்ச்சியில்பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு திறன் சார் போட்டிகள் அறிவியல் மாதிரிகள் தயார் செய்யும் போட்டிகள் வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.


நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.




இதில் வேதியல் துறை பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் வாசுதேவன, மதுரை பொறியியல் கல்லூரி தியாகராஜன்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.


நிகழ்வில் அறிவியல் வாழ்க்கையோடு இணைந்து இருப்பதை எடுத்துக் கூறி மாணவர்கள் தங்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து துறைகளிலும் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.


துணைவேந்தர் தலைமை உரையில் அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கினை எடுத்துக் கூறி மாணவர்கள் தங்களின் அறிவியல் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.


முன்னதாக கல்லூரி முதல்வர் பிச்சைமணி அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சிறப்புகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் தனித்தன்மைகள் குறித்து எடுத்துக் கூறினார். 


கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளை வாழ்த்தி மாணவர்களிடையே ஆக்கபூர்வமான அறிவியல் சிந்தனைகள் மேம்பட வேண்டும் என்று எதிர்கால தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாணவர்கள் படைப்புத்திறேன் கொண்டவர்களாக தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்

இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments