மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக திருச்சியை சேர்ந்த முஹமது ஷரிப் நியமனம்
திருச்சியை சேர்ந்த முஹமது ஷரிப் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், மாநில பொதுச் செயலாளர் மௌலா நாசர் அவர்களுக்கு, பொருளாளர் ஜே எஸ் ரிபாய் அவர்களுக்கும் மற்றும் மாநில செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், நாகை முபாரக், வல்லம் அஹ்மது கபீர், பேராவூரணி சலாம் உட்பட அத்துனை மாநில நிர்வாக குழுவினர்க்கும் மேலும் திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
எனக்கு கொடுக்கப்பட்ட இந்த பொறுப்பினை கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பேன் என்றும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வேன் எனவும் வாக்குறுதி அளிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
0 Comments