தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக வரக்கூடிய டிசம்பர் - 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுமையாக பத்து மண்டலங்களாக போராட்டம் நடைபெறவிருப்பதாக தமுமுவின் தலைவர் பேராசிரியரும் பாபநாசம் சட்டமண்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பையோட்டி திருச்சி மண்டலம் சார்பாக பாலக்கரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது தலைமையில் திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை,திருவரங்கம்,முசிறி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்போராட்டம் சம்பந்தமாக திருச்சியிலுள்ள அனைத்து பள்ளிவாசல் ஜமாத்களையும் நேரடியாக சந்தித்து போராட்டம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாண்டமங்களம் இப்ராஹீம் தலைமையில் பொருளாளர் ஹீமாயுன்,தகவல் தொழில்நுட்ப மாநில துணை செயலாளர் M.P நஸீர்,மாநில செயற்குழு உறுப்பிணர் சபீர்,மாவட்ட துணை செயலாளர் அசாருதீன்,அப்துர் ரஹ்மான்,அப்துர் ரஹீம்,உறையூர் பகுதி தலைவர் ஆரிப் மற்றும் பகுதி செயலாளர் தில்லை ஜாஹீர் மற்றும் பகுதி செயலாளர் அபுதாஹீர் ஆகியோர் அடங்கிய குழு திருச்சி மேற்கு சட்டமன்றத்திற்குட்பட்ட உறையூர் பகுதி சுபேதார் பள்ளிவாசல்,தில்லைநகர் ரஹ்மானியபுரம் பள்ளிவாசல்,பாண்டமங்களம் முஸ்லீம் தெரு,பங்காளிதெரு,பாக்குபேட்டை,இராமலிங்க நகர்,சண்முகா நகர்,புத்தூர்,
திருவானைக்கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து போராட்டம் குறித்தான அவசியத்தை உணர்த்தி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் அந்தந்த பகுதிகுட்பட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
0 Comments